கடவுள் விளக்கத்தில் சிவானந்த பரமஹம்சரும், சிவ வாக்கியரும், திருமூலரும் ஒத்த கருத்தையே கூறியுள்ளனர். நாத்திகர்கள் - கற்சிலையில் கடவுள் இல்லை. ஆத்திகர்கள் - வழிபடும் கற்சிலையில் கடவுள் உள்ளார். ஞானியர்கள் - நமக்கு உள்ளும் புறமுமாக, பிரபஞ்சத்தின் உள்ளும் புறமுமாக எங்கும் இருக்கும் கடவுள் இந்த கற்சிலையிலும் உள்ளார். இதில் மட்டும்தான் உள்ளார் என்பதும் தவறு. இதில் இல்லை என்பதும் தவறு.
அண்டத்தில் உள்ளது. பிண்டத்தில் உள்ளது. மனிதன் ஒரு நடமாடும் பிரபஞ்சம். சிரசே ஆகாயம். மூலாதாரமே பூமி. வாதம் பித்தம் கபமே மற்ற மூன்று பூதங்களாகிய காற்று, வெப்பம், நீர். இவை மூன்றும் ஒன்றிற்குள் ஒன்றாக இருக்கின்றன. ஒன்றிலிருந்து ஒன்றாக உற்பத்தியாகின்றன. புருவமத்தியில் இருந்து தலைஉச்சியாகிய பிரம்மரந்திரம் வரை உள்ள பகுதி, சிரசே ஆகாயம். அந்த ஆகாயத்தில் புருவமத்தியில் இருக்கும் ஜீவசக்தியாகிய வாயுதான் சூரியன். தீட்சை உபதேசம் என்ற முறையில் அந்த நெற்றிக்கண் திறத்தலே சூரிய உதயம். அது உடலிலும் வாழ்விலும் ஆன்மாவிலும் பிரகாசத்தை உண்டாக்குகிறது. உச்சியில் பிரம்மரந்திரத்தில் அதே சூரியன் சஞ்சரிக்கும் ;போது அங்கு ஜீவசக்தியாகிய வாயுவை கவனிக்கும் போது அதுவே நண்பகல். உடலில் வாழ்வில் ஞனாத்தில் அமைதியின் பிரகாசத்தின் உச்சம். உபதேசம் பெறாதவர்கள், நெற்றிக்கண் திறக்கப்படாதவர்கள் இன்னும் அவர்கள் ஆன்மீக வாழ்வில் இன்னும் சூரிய உதயம் காணாதவர்கள். இருளில் மாயையில் மயக்கத்தில் புலன் மயக்கத்தில் வாழ்பவர்கள்.
ஆக்கினை முதல் துரியம் வரை உள்ள இந்த ஆகாயத்தில் ஜீவன் இருக்கிறது. அந்த ஜீவனின் சலனமே ஜீவசக்தியாகிய வாயு. கடல் வேறு அலை வேறா? இல்லை. கடலின் அசைவே அலை. ஜீவன் வேறு ஜீவசக்தியாகிய வாயு வேறா? இல்லை. ஜீவனின் அசைவே ஜீவசக்தியாகிய வாயு. ஜீவன் ஜீவனாக உள்ளடங்கி அமைதியாக இருந்தால் அதுவே சிவன். சிவனே என்று இருக்கும் நிலை. அதே ஜீவன் ஜீவசக்தியாக மனமாக எண்ணங்களாக வெளியே வியாபித்தால் அதுவே சக்தி நிலை.
இந்த புருவமத்தியில் தான் 3 கோடியே 50 லட்சம் நாடிகளும் வந்து ஒன்று சேர்கின்றன. அந்த நாடிகளின் வீரியமே சுக்கிலம். சுக்கிலம்; இருக்குமிடம் அக்னி நேத்திரம், அதாவது நெருப்புக்கண், நெற்றிக்கண் என்று சொல்லப்படுகின்ற புருவமத்தி. அதனால்தான் உடலுறவில் அல்லது சுயஇன்பத்தில் சுக்கிலமாகிய விந்து வெளியேறும் போது உடலின் அத்தனை நாடி நரம்புகளில் மின்சாரம் பாய்ந்தது போன்று உச்ச கட்ட இன்பத்தை ஜவன் உணர்கிறது. நாடிகளின் வீரியமே சுக்கிலம். அந்த நாடிகள் தளர்ந்தால் உடலிலே முதுமை. விந்து உற்பத்தியும் உடலில் குறைகிறது. அதிகமான மின்சாரம் வீட்டில் பயன்படுத்தும் வயர்களில் அடிக்கடி பாய்ந்தால் அது கருகி எரிந்து விடும். அதுபோல் அடிக்கடி தாம்பத்தியம் சுயஇன்பத்தில்; ஈடுபட்டால் அடிக்கடி மிகை மின்சாரம் பாய்ந்து நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்துவிடும். உடலில் சுக்கிலம் குறையும் சுருக்கம் ஏற்படும். தளர்ச்சி ஏற்படும். முதுமை வரும். உடலில் தேஜஸ் பொலிவு பிரகாசம்; ;மறைந்துவிடும். நாடி நரம்புகள் முற்றிலும் தளர்ந்தால் அதுவே மரணம். அந்த தளர்வடையும் நரம்புகளை தளர்வடையாமல் வைத்துக்கொள்வதற்கே காயகல்ப கலையில் நரம்பூக்கம் என்னும் பயிற்சி சொல்லித்தருகிறார்கள்.
ஜீவசக்தியாகிய வாயுவின் உற்பத்தி இடமும் புருவமத்தி. சுக்கிலத்தின் இருப்பிடமும் புருவமத்தி. வாயு சுக்கிலம் இரண்டும்; அக்னியின் சொரூபம். அதனால்தான் அடிக்கடி சம்யோகம் சுயஇன்பம் செய்தால் உடல் சூடு அடைகிறது. அதனால்தான். இவைஇரண்டும் இருக்குமிடமாகிய நெற்றிக்கண்ணை நெருப்புக்கண் என்று கூறுகிறோம். இந்த சுக்கிலம் இளகினால்தான் உடலுறவு சாத்தியம். சிரு~;டி சாத்தியம். அது இளகுவது நடமாடிக்கொண்டிருக்கிற, கதாகதம் செய்துகொண்டிருக்கிற, சக்திவடிவில் ஸ்த்ரீ வடிவில் இருக்கும் ஜீவசக்தியாக இருக்கின்ற வாயு, புருவமத்தியில் புரு~ வடிவில் சிவநிலையில் இருக்கும் ஜீவநிலையிலிருக்கும்; வாயுவுடன் சம்யோகம் செய்யும் ;போது. அந்த சுக்கிலத்தை இளக்கி ஜீவன் சக்தியோடு சேர்த்து கீழே கொண்டுவந்து சிரு~;டியை உண்டாக்குகிறது ஜீவசக்தியாகிய வாயு. இங்கு சுக்கிலத்திற்குள் வாயு புகுந்து சிரு~;டி உண்டாகிறது என குரு கூறுவதன்; ;பொருள் என்ன?
முதலில் சிரு~;டிக்கு காரணமான வாயு எங்கே எப்படி உற்பத்தியாகிறது என்றும் பின் சிரு~;டிக்கு பயன்படுத்தப்படும் சுக்கிலம் எங்கே எப்படி உற்பத்தியாகிறது என்பதையும் பின் அவை இரண்டின் மூலமும் சிரு~;டி எப்படி உண்டாகிறது என்றும் குரு சீடனுக்கு விளக்குகிறார். வாயு எங்கே உற்பத்தியாகிறது? புருவமத்தியில். எப்படி உற்பத்தியாகிறது. புருவமத்தியிலிருந்து உச்சந்தலை வரை உள்ள பகுதியே ஆகாயம் அங்குள்ள ஜீவனின் அசைவே வாயு. அது உற்பத்தியாகும் இடம் புருவமத்தி. சுக்கிலம் எங்கே உற்பத்தியாகிறது. புருவமத்தியில். எப்படி உற்பத்தியாகிறது? ஜீவசக்தியாகிய வாயு எப்படி அக்னியின் சொரூபமாக இருக்கிறதென்றும் அதற்குள் எப்படி அக்னி இருக்கிறதென்றும் அந்த வாயு எப்படி தேகமாக இருக்கிறதென்றும் போன பதிவில் பார்த்தோம். வாயுவாக இருப்பது தேகம். தேகமாக இருப்பது வாயு. அந்த தேகத்திற்குள் அக்னி அதிகரிக்கும் போது அதிலிருந்து ஆவியாக உற்பத்தியான வியர்வைதான் சுக்கிலம். இப்படித்தான் சுக்கிலமும் புருவமத்தியில் அத்தனை நாடிகளும் ஒன்று சேரும் புருவமத்தியில் அதன் வீரியமாக உற்பத்தியாகிறது. இவ்வாறு வாயுவின் அக்னியின் வியர்வையிலிருந்து சுக்கிலம் உற்பத்தியாவதால் அதிலிருந்து சிரு~;டி உண்டாவதால் “பிரமாண்ட கடாகமே (உலகம் முழுவதுமுள்ள உயிர்கள்) சுவேத ஜோத்பவம் (வியர்வையிலிருந்து உற்பத்தியானது) என்று முன்னோர்கள் ;கூறினார்கள். இந்த சுக்கிலத்திற்குள் வாயுபுகுந்து எப்படி சிரு~;டி உண்டாகிறது? சிறுவர்கள் முட்டைவிடும் சோப்புதண்ணீரை அல்லது காட்டாமணக்கின் பாலை ஒரு இலையில் எடுத்து ஈர்க்கில் குச்சியை சிறிது வளைத்து ஊது குழல் போல செய்து ஒரு ஊதும் அந்த பாலை தொட்டு ஊதும் போது அங்கே கணக்கில்லாமல் முட்டைகள் உற்பத்தியாகின்றன. அந்த ஒவ்வொரு முட்டையிலும் உறை போல சோப்புநீர் அல்லது காட்டாமணக்கு பால் இருந்தாலும் முட்டைகளுக்கு உள்ளே இருப்பது என்ன? வாயுவாகிய காற்றுதான். இதுதான் சம்யோகம் எனும் புணர்ச்சியின் போதும் நடக்கிறது. சுக்கிலம் காட்டாமணக்கு பால் இரண்டுமே பசைத்தன்மை உள்ளது. மூச்சை அடக்கி அடக்கி சீராக ஊதிதான் சம்யோகமே நடக்கிறது. அவ்வாறு மூச்சுவிட்டு சம்யோகம் நடைபெறும் ;போது பசைத்தன்மை உள்ள சுக்கிலத்திற்குள் வாயுவை செலுத்தும் போது மூத்திரப்பை நுனிவரை முட்டைகள் நீண்டு பின் அதிலிருந்து விடுபட்டு சிறு சிறு முட்டைகளாக ஸ்தீரியின் கற்ப பைக்குள் விழுந்து சிரு~;டி சம்பவிக்கிறது. இப்படி எத்தனை முட்டைகள் கற்பபைக்குள் விழுகிறதோ அத்தனை குழந்தைகள் உண்டாகின்றன. ஒரே பிரசவத்தில் இப்படித்தான் இரண்டு மூன்று குழந்தைகள் கூட உற்பத்தியாகின்றன. வித்தில் வீரியம் இல்லையென்றால் போதுமான பசைத்தன்மை இல்லையென்றால் ஊதுதல் முறையாக இல்லையென்றால் அங்கே ஒரு முட்டைகூட தோன்றுவதில்லை. குழந்தையும் ஜனிப்பதில்லை. அது சில சிறுவர்கள் சோப்புநீரில் முட்டைவிடும்போது ஒரு முட்டைகூட உருவாகாமல் வெடித்து வெடித்து ஏமாற்றம் அடைவது போல.
சீடனானவன் சுவேதஜம், அண்டஜம், உத்பீஜம், ஜராயுஜம் என்ற நான்கு வகை சிரு~;டிகளை விளக்குமாறு கேட்கிறான். இதை பற்றி உனக்கு ஏற்கனவே என்ன தெரியுமென்று குரு கேட்கிறார். அதற்கு சீடன் சுவேதஜம் என்றால் வியர்வையிலிருந்து மூட்டைப்பூச்சி பேன் முதலியவையும், அண்டஜம் என்றால் முட்டையிலிருந்து பறவை, பாம்பு, மீன் முதலியவையும், உத்பீஜம் என்றால் பூமியிலிருந்து முளைத்து ; புல், பூண்டு தாவரங்கள் முதலியவையும், ஜராயுஜம் என்றால் பிரசவத்தின் மூலம் மனிதன் பசு முதலியவையும் பிறக்கின்றன என அறிந்துள்ளதாக கூறுகிறான். இந்த நான்கு வகைபிறப்புகளும் வேறு வேறு வகையிலான பிறப்புகள் என்று கருதுவதுதான் தவறு என்று குரு விளக்குகிறார்.
எல்லாருக்கும் வாயு இருக்கிறது. அதுதான் தேகம். அந்த வாயுவாகிய தேகம் உ~;ணம் அடையும்போது அதிலிருந்து தோன்றும் வியர்வையே சுக்கிலம். சுவேதம். அதுவே சிரு~;டிக்கு ஆதாராம் என்பதால் தேகத்தின் வியர்வையிலிருந்து சிரு~;டி என்று கூறினார்கள். அது பருஉடலின் வியர்வை என மக்கள் புரிந்துகொண்டதுதான் தவறு. தேகம் என்று பருஉடலை எண்ணிவருவதுதான் அத்தனை தவறான புரிதலுக்கும் காரணம்.
சுக்கிலத்தில் வாயு புகும் போது முட்டை உருவாகிறது. அந்த முட்டையிலிருந்து சிரு~;டி உண்டாவதால் அண்டஜம் என்று கூறினார்கள். குறிப்பிட்ட அளவிற்கு மேல் வளர்ந்தஉடன் முட்டையை உடைத்துக்கொண்டு வெளியே உயிர் வருகிறது. அதுதான் முளைப்பு. அது விதையிலிருந்து தாவரம் வெளிவருவதை போல. அதுவே உத்பீஜம் என்று சொல்லப்பட்டது. அவ்வாறு வெளிவந்தாலும் சிறிது காலம் சில மணிநேரம் பூமி என்னும் கர்ப்ப பைக்குள் இருக்கும் தாவரங்கள் பின்புதான் மண்ணைவிட்டு வெளியே தலையை காண்பிக்கும். இதேதான் பெண்ணிடத்தில் நடக்கும் போது அதை பிரசவித்து பிறத்தல் என்று கூறுகிறோம். இதற்கே ஜராயுஜம் என்று பெயர். இவை நான்கும் நான்கு வகை பிறப்புக்கள் அல்ல. ஒரே பிறப்பின் நான்கு நிலைகள்.
எல்லா உயிர்களுக்குள்ளும் வாயு இருக்கிறது. அதற்குள் அக்னி இருக்கிறது. அதிலிருந்து வியர்வை உண்டாகிறது. அந்த வியர்வையாகிய சுக்கிலத்திலிற்குள் வாயு புகும்போது முட்டை உருவாகிறது. அந்த முட்டைகள் கற்ப பையில் விழுந்தோ அல்லது கோழி பாம்பு முதலிய உயரினங்களில் உடலுக்கு வெளியே தாயின் சூட்டிலோ முளைப்பு என்பது நிகழ்கிறது. வளர்ந்த உயிர் முட்டையிலிருந்தோ தாயின் உடலுக்கு வெளியிலோ வரும்போது அதை பிரசவித்தல் என்று கூறுகிறோம்.
பரு உடலின் வியர்வையிலிருந்து பேன் முட்டை பூச்சி என்றால் எல்லார் உடலிலும் வியர்வை இருக்கிறது. ஏன் பேன் முட்டைபூச்சி எல்லார் உடலிலும் ;இல்லை.
பொருத்தமான உதாரணங்கள்: பன்னீர் செம்பிலிருந்து தெளிக்கும்போது பன்னீர் சிறு சிறு முட்டைகளாக சிதறுவதைபோல சுக்கில துளிகள் சிதறி அவை எல்லாவற்றிலும் வாயு நுழைந்து விட்டுப்போகாமல் தென்னம்பூ குலைபோல கர்ப்பபையில் விழுகிறது என உதாரணத்துடன் குரு விளக்குகிறார்.
வாயுவாகிய காற்றிற்கு உருவமில்லை. உருவமில்லாத ஒருவருக்கு பெயர் ஏது? ஈஸ்வரனுக்கும் உருவமில்லை. நாமமும் இல்லை. வாயுவும் உள்ளும் புறமுமாக எங்கும் இருக்கிறது. ஈஸ்வரனும் எங்கும்; இருக்கிறார். நமக்கு முன்னே இருக்கும் காற்றிற்கு அடி எது முடி எது என்று காண இயலுமா? முடியாது. பிரபஞ்சத்திற்கு உள்ளும் அப்பாலும் எங்கும் நிறைந்த ஏகப்பெருவெளியாக வெட்டவெளியாக எல்லையே இல்லாமல் உள்ள ஈஸ்வருக்கும் அடி முடிகாண இயலாது. வாயுதான் படைத்தல் காத்தல் அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்கிறது. இதைத்தான் ஈஸ்வரன் படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்களை செய்கிறார் என்று கூறுகிறோம்.
உள்ளும் வெளியும் தான் என்ற நிலையலிருந்து உண்டானது. ஜீவசக்தியாகிய வாயு உள்ளும் வெளியுமாக வியாபிக்கும் போது மனம் உண்டாகி தான் என்ற எண்ணம் உண்டாகி தனக்குள் தனக்கு வெளியே என்றெல்லாம் ;உண்டாயிற்று. ஆனால் அது மனமாக இருக்கும் போது தோன்றுவது. ஆனால் அதே ஜீவசக்தி சிவநிலையில் இருக்கும்போது வெட்டவெளியாக மனமின்றி இருக்கும்போது. அங்கு நான் இல்லை. சிவநிலைமட்டுமே இருக்கிறது. அந்த நிலையில் உள்ளும் வெளியும் இ;ல்லை. பரந்து விரிந்த பரவெளிக்குள் நின்று பாருங்கள். அங்கே உள் ஏது வெளி ஏது?
எது ஈஸ்வர சேவை? சேவித்தல் என்பது குடித்தல் உட்கொள்ளுதல் என்று பொருள் படும். உள்ளிருக்கும் வாயுவை வெளியே அதோகதியாய் விடாமல் உள்ளே நடக்கவிட்டு ஈஸவரனோடு சேருவதே உட்கொள்ளுதல் சேவித்தல் என்று பொருள்படும். அதுவே ஈஸ்வர சேவை. அதுவன்றி குளித்து கோயிலுக்கு சென்று பால் நெய்வேத்தியங்கள் செய்து பூசை செய்வதல்ல ஈஸ்வர சேவை. அதனால் முக்தி கிட்டாது. வெளியே வியாபித்து நசிந்து அழிந்துபோகும் வாயுவை உட்புறமாக பிரமரந்திரத்தில் துரியத்தில் லயமாக செய்வதே ஈஸ்வர சேவை. அதன் உயர்நிலையே முழுமை நிலையே முக்தி.
ஜீவ சக்தியாகிய வாயுதான் ஈஸ்வரன். எப்படி? - ஈஸ் ூ வரன் - பரண சிரே~;டன் - காப்பாற்றும் செயலை செய்வதற்கு உரிமை உடையவன் - ஏன் மாப்பிள்ளை பார்த்தல் வரன் பார்த்தல் என்கிறோம்? ஏன் கணவனே கண்கண்ட தெய்வம் என்கிறோம்? நம்மை காப்பாற்றுவது வாயு அப்படியானால் ஜீவ சக்தியாகிய வாயுதான் ஈஸ்வரன்.
படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலை செய்யும் ஈஸ்வரனும் ஜீவசக்தியாகிய வாயுவும் ஒன்றே! சிரு~;டி, ஸ்திதி, சம்ஹாரம் மூன்றிற்கும் காரணம் வாயுவாகிய ஈஸ்வரனே! உருவமில்லாத வாயுதான் உருவமுள்ள உடல் அவதரிக்க காரணமாகிறது. சிரு~;டிக்கு காரணம் வாயுவே! புணர்ச்சி இன்றி சந்தானம் ;இல்லை. வாயு ;இல்லா உடலாகிய பிணம் புணர்ச்சி செய்யுமா? சிரு~;டிக்கு புணர்ச்சி தேவை. புணர்ச்சிக்கு வாயு உள்ள உடல் தேவை. ஆக சிரு~;டிக்கு காரணம் வாயுவே!
உடம்பில் இருக்கும் நாடிகள் 3 கோடியே 50 இலட்சம். அதில் 72000 மிக முக்கியமானவை – இவை காற்று சஞ்சரிப்பதற்கு பொருத்தமான நாடிகள். - இந்த 72000-ல் 1702 மட்டுமே ஸ்தூல நாடிகள் மற்றவை சூட்சம நாடிகள் - இந்த 1702-ல் தச நாடி என்று சொல்லப்படுகிற 10 நாடிகளே மிக முக்கியமானவை. அவற்றிலும் மிக முக்கியமானவை இடகலை, பிங்கலை மற்றும் சுழிமுனை. அதாவது வாத பித்த கபநாடி. அதிலும் முக்கியமானது சுழிமுனை நாடி. சுழிமுனை என்பது புருவமத்தி. மூலாதாரத்தில் தொடங்கி சுழிமுனையில் வந்து அனைத்து நாடிகளும் சங்கமிக்கும். அந்த நாடிகளில் முக்கியமானது சுழிமுனை நாடி.
உடலின் அனைத்து நாடிகளும் ஒன்று சேரும் இடம், சுக்கிலம் உற்பத்தியாகும் இடம், புருவமத்தி. உடலில் மேலும் கீழும் கதாகதம் செய்து கொண்டிருக்கும் ஜீவசக்தியாகிய வாயு ஸ்த்ரீ வடிவம். புருவ மத்தியில் இருக்கும் ஜீவசக்தியாகிய வாயு புரு~ வடிவம். புணர்ச்சியின் போது இவை இரண்டும் புருவமத்தியில் சங்கமித்து சுக்கிலம் கீழ் நோக்கி விரைந்து அதில் வாயு புகுந்து சிரு~;டி உண்டாகிறது. –
கங்கு மட்டுமே இருப்பது சாதாரண மனிதர்களின் உடல். வாயுவைக் கொண்டு ஊதுதல் என்பதை செய்வதால் அக்னி இருப்பது வாசியோகம் செய்பவரின் உடல். நெருப்பை உருவாக்குதல், காத்தல், அழித்தல் அனைத்தும் வாயுவினால்.
நம் உடலை முதுமை வராமல் அழியாமல் பாதுகாக்க வேண்டுமென்றால் உண்மையில் உடல் எதுவென்று தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய சரீரம் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பது உண்மையில் உங்கள் உடல் இல்லை. உள்ளிருக்கும் காற்றுதான் சரீரம். எப்பொழுது இந்த உடலை சரீரமென்றும் பிணமென்றும் அழைக்கிறோம். ஜீவசக்தியாகிய வாயு, அது இருந்தால் சரீரம் என்றும், இல்லையானால் பிணம் என்றும் அழைக்கிறோம். சரீரம் என்ற வார்த்தை உடலை குறிக்கிறதா? அல்லது உடலில் இருக்கும் வாயுவை குறிக்கிறதா? எது இருந்தால் இந்த உடலை சரீரம் என்று அழைக்கிறோமோ அதுவே சரீரம். வாயுவே சரீரம். காற்றே சரீரம். காற்று இல்லாவிட்டால் உடல் அழிந்து போகின்றது என்று நினைக்கிறோம். ஆனால் காற்றுதான் உடல் என்பதை நாம் உணர்வதில்லை. னுநயன டிழனல ளை றசழபெ – டிழனல ளை ழெ அழசந”ளை வாந சiபாவ நஒpசநளளழைn. பல்ப் என்று எதை சொல்லுவோம் கரளந போனதையா? அல்லது கரளந போகாத பல்பையா? பேஸ்ட் என்று எதை சொல்லுவோம் காலியான டூத் பேஸட்டையா? அல்லது பசை நிரம்பி உள்ளதையா? புத்தகம் என்று சொல்லுவது அட்டையையா? உள்ளே இருக்கும் வெற்று பேப்பரையா? அல்லது அந்த பேப்பரில் பிரிண்ட் ஆகிஇருக்கும் அர்த்தமுள்ள வார்த்தைகளையா? வாழைப்பழம் என்று சொல்லுவது உள்ளிருக்கும் கனியையா? அல்லது அதன் தோலையா? உள்ளிருக்கும் கனி தீர்ந்து விட்டால் இல்லாவிட்டால் அதற்கு பெயர் தோல். உள்ளிருக்கும் கனியாகிய ஜீவ சக்தியாகிய வாயு இருந்தால் சரீரம் என்றும் அது இல்லாவிட்டால் அதற்கு பிணம் என்று பெயர். அப்படியானால் உள்ளிருக்கும் வாயுதான் சரீரம்.
நாம் காணவும், கேட்கவும், உண்ணவும், எண்ணவும் நடமாடவும் உதவுவது சரீரம். உள்ளே ஜீவசக்தியாகிய வாயு இல்லாவிட்டால் இவைகளை செய்ய முடியுமா? பிணத்தால் இவைகளை செய்ய முடியுமா? அந்த பிணத்திற்கு இவையெல்லாம் முடியாது. அப்படியானால் சரீரம் என்பது எது? இந்த உடலா? அல்லது உள்ளிருக்கும் ஜீவசக்தியாகிய வாயுவா?
சரீரம் என்ற வார்த்தைக்கு திராவகமாதல் என்று பெயர். அதாவது நீருற்று போல ஊறி ஓடிக் கொண்டிருப்பது. சிறிது சிறிதாக அழிந்து கொண்டிருப்பது. ஒரு சமயத்தில் முற்றிலும் வற்றி இல்லாமல் போவது. நம் உடலில் சிறிது சிறிதாக நசிந்து போய் அழிவது எது இந்த பருஉடலா? அல்லது வாயு உடலா? வாயு உடல் அதுவே சரீரம். உண்மையில் நசிந்து போகின்றது என்று நாம் நினைக்கின்ற இந்த பருஉடல் நசிவதில்லை. வைரம் பதித்த மரத்துண்டு மண்ணில் புதைத்தால் என்ன ஆகும். மரத்துண்டு கரையானுக்கு புழு பூச்சிகளுக்கு இரையாகி வைரம் மிஞ்சும். அந்த வைரம் தான் நமது எலும்புகள் மண்டையோடு, மரத்துண்டுதான் தோலும் சதையும்- பலநாள் கழித்து தோண்டி பார்த்தாலும் மண்டையோடு எலும்புகள் நசிவதில்லை. மேலும் இறந்து போன மம்மி மியுசியத்தில் இருக்கும் பதப்படுத்தப்படும் உடல், இறந்து போன மீன்களின் பதப்படுத்தப்பட்ட உடல் என்றும் நசிந்து போவதில்லை. உண்மையில் நசிந்து போவது உடலில் இருக்கும் ஜீவசக்தியாகிய வாயுதான். காற்றுதான். அது உடலில் நீருற்று போல ஊறி தொடர்ந்து வெளியே வியாபித்து மனமாக மாறி பஞ்சேந்திரியங்கள் வழியாக வெளியே சென்று நசிந்து நசிந்து ஒருகட்டத்தில் அந்த நீரூற்று எப்படி வற்றி இல்லாமல் போகிறதோ அதேபோல் இல்லாமல் போகிறது. அப்படி நசிந்து இல்லாமல் போவது வாயுதான். அதுவே சரீரம்.
எரியும் வாயு அக்னி சொருபம். சப்த சொரூபம். விளக்கு எரிகிறது என்று கூறுகிறோம். உண்மையில் எரிவது விளக்கா? அதிலிருக்கும் எண்ணையா? திரியா? இது எதுவுமில்லை. காற்றுதான் எரிகிறது. நெருப்பு உண்மையில் எதற்குள் இருக்கிறது? விளக்கிலா? திரியிலா? எண்ணெயிலா? தீக்குச்சியிலா? அல்லது உரச உதவும் தீப்பெட்டியிலா? இவை எதிலும் இல்லை. காற்றில். காற்றின்றி விளக்கு எரிவதில்லை. காற்று அதிகமாக இருந்தாலும் விளக்கு எரிவதில்லை. ஒரு விளக்கை பொருத்தி காற்று போகமுடியாத கண்ணாடி பெட்டிக்குள் வைத்து விடுங்கள். அந்த விளக்கு, அந்த பெட்டிக்குள் இருக்கும் காற்று தீர்ந்து எரிந்து போகும் வரைதான் எரியும். பெட்டிக்குள் காற்று தீர்ந்த உடன் விளக்கும் அணைந்துவிடும். எரிவது விளக்கா? காற்றா? காற்றுதான். இந்த உடலும் அப்படி ஒரு விளக்குதான். உள்ளே காற்று தீர்ந்துபோகும்போது எரிவதற்கு ஒன்றும் இன்றி பிணம் என்று ஆகிறது. முதுமை அடைவது அழிந்து போவது இந்த உடல்தான் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் தீர்ந்து போவது அழிந்து போவது உள்ளிருக்கும் காற்றுதான். இதேபோல்தான் விறகுதான் எரிகிறது என்று நினைக்கிறோம். உண்மையில் எரிவது விறகா? காற்றா? காற்று இல்லாவிட்டால் அங்கே ஏதாகிலும் எரிய முடியுமா? எரிவது காற்றுதான். எரியும் வாயு அக்னி சொருபம்.
அக்னி சொரூபமும் வாயுதான். சப்த சொரூபமும் வாயுதான். வாயு இல்லாவிட்டால் சப்தம் உண்டாக முடியுமா? ஜீவசக்தியாகிய வாயுதான் சப்தமாக நசிந்து செலவாகின்றது. வாயு இல்லையெனில் சப்தமில்லை. சப்தமில்லை எனில் மொழி இல்லை. ஆகவே மொழியும் ஜீவசக்தியாகிய வாயுதான். கத்தாதே கத்தாதே என்று ஏன் கூறுகிறார்கள்? அங்கே செலவாவது ஜீவசக்தியாகிய வாயுதான். அது மரணத்திற்கு ஒப்பாகும். எனவேதான் கத்தாதே கத்தாதே என்கிறார்கள். மலையாளத்தில் காளுக என்றால் அழுதல் என்று பொருள். அங்கேயும் இதுதான் நடக்கிறது. ஆக காற்று சப்த சொரூபம்.
நமது மூச்சுக்காற்றானாது உள்ளே வெளியே என்று ஓடும் நிலையிலிருந்து அதை உடலின் உட்புறமாக மேல் கீழ் என்று ஓடும் நிலைக்கு அதன் வழக்கமான பாதையிலிருந்து அதை மாற்றி அமைக்க வேண்டும். அதன்பின் அவ்வாறு உட்புறமாக மேலும் கீழும் ஓடும் மூச்சுக் காற்றை தொடர்ந்து கவனிப்பதின் மூலம் அப்படி கவனிக்கும் மனமே அந்த மூச்சுக் காற்றோடு கலந்து மேலும் கீழும் ஓடும் நிலை ஏற்படும். இப்படி பயிற்சி செய்யும் போது மனதில் எண்ணங்கள் ஏற்பட்டால் அது நம்மை மூச்சின் ஓட்டத்தை கவனிக்க விடாமல் அதோடு இணைந்து இருக்க விடாமல் நம்மை எங்கோ எடுத்துச் சென்றுவிடும். மீண்டும் சுயநிலைக்கு வந்து மூச்சைக் கவனிக்க சில நொடிகளோ நிமிடங்களோ ஆகலாம். அது அவரவர்கள் உலக வாழ்வில் எவ்வளவு பற்று வைத்துள்ளார்கள் உலக விசயங்களில் எவ்வளவு தங்களது மனதை சிக்க வைத்துள்ளார்கள் என்பதை பொறுத்தது. ஆனால் விழிப்புணர்வோடு இருப்பேன் மனதின் பின்னால் செல்லாமல் மூச்சை தொடர்ந்து கவனிப்பேன் என்று சில முறை சங்கல்பம் செய்து கொண்டு செய்தால் மனம் வெளியே ஓடினாலும் விரைந்து மீண்டும் மனம் திரும்பி வந்து மூச்சினை தொடர்ந்து கவனிக்க முடியும். இந்த இடத்தில் மேலும் கீழும் ஓடும் மூச்சுக் காற்றை ஒரு குதிரை போல் பாவித்து கவனிக்கும் மனதை அதன் மேல் ஏறி அதை இறுக பிடித்துக் கொண்டு சவாரி செய்ய வேண்டிய குதிரை ஓட்டியாக காணலாம். தொடர்ந்து மூச்சைக் கவனித்து அந்த மூச்சாகவே நாமும் மேலும் கீழும் உட்புறமாக ஓடும் போது சிறிது சிறிதாக குதிரையின் அதாவது ஓடும் மூச்சின் வேகம் குறையும். மூச்சின் வேகம் குறைவதற்கு ஏற்ப அந்த மூச்சாக மாறி தாங்கள் ஓடிக்கொண்டிருக்கும் வேகமும் குறைவதை காணலாம். ஒரு கட்டத்தில் நெஞ்சுக் குழியில் குதிரை தன் ஓட்டத்தை முற்றிலும் நிறுத்தி நிற்பதை அதாவது மூச்சுவிடுவது முற்றிலும் நின்றுவிடுவதை காணலாம். அப்போது அங்கே ஒரு துடிப்பினை உணர நேரிடும். அந்த துடிப்பை ஆழ்ந்து கவனித்து அந்த துடிப்பாகவே மாறி நீங்கள் துடிக்கும் போது மனமும் இருக்காது. மூச்சும் இருக்காது. இதுவே வாசியோக மோட்ச சூத்திரம் ஒன்று.
ஐந்தாவது வேதமாக கருதப்படும் சித்த வேதம் நூல் “சத்குருவே” என்ற வார்த்தையுடன் தொடங்குகிறது. சத்குரு என்ற வார்த்தை தன்னை உணர்ந்த ஞான ஆசிரியரை குறிக்கும். கபீர்தாஸ் தன்னுடைய பாடலில் சத்ய புருசன் என்று அழைக்கப்படும் கடவுளை உணர்ந்தவரே சத்குரு என்று குறிப்பிடுகின்றார். அரூபமான கடவுள் தன்னை உணர்ந்த நிலையில் இருக்கும் ரூப வடிவமே சத்குரு. சத்தியம் சத் என்றால் உண்மை, கடவுள் என்று பொருள்படும். அப்படி பார்த்தால் உண்மையின் வடிவாய் இருப்பவரே சத்குரு. இதற்கு இன்னொரு பொருளும் கொள்ளலாம். சித்த வேதத்தில் சத்து போதல் என்றால் நம்முள் இருக்கும் ஜீவசக்தியாகிய வாயு அதோகதியாய் வெளியே செலவாகி செலவாகி முழுவதும் நசிந்து போதல், இறந்து போதல் என்றும் அதையே மக்கள் செத்துப் போதல் என்று காலப்போக்கில் கூறும் வழக்கம் வந்ததாக குறிப்பிடப்படுகிறது. சத்து என்பது ஜீவசக்தியாகிய வாயு. அதுவே நமது ஜீவன். அது தன்னில் லயமாகிய நிலையே சிவம். பிரம்மம். இவ்வாறு லயமாகி தானாகி தன்மயமாகி பிரம்ம நிலை அடைந்த ஞானியரே சத்குரு என அழைக்கத் தகுந்தவர்கள்.
Who
is Sadhguru?
Siddha
Vedam also known as Fifth Vedam begins with the word “Sadhguru!” (or Satguru). The term -Sadhguru refers to an enlightened master
who can guide a disciple to attain enlightenment. Kabir Das says in one of his
songs: One who has realized God the Sadh Purush is Sadhguru. Sathiyam or sat
stands for Truth. Hence Sadhguru is an embodiment of Truth. It is said in
Siddha Vedam that we exhaust jeeva sakthi vayu in our day to day life
continuously and the result is death which was initially known as ‘sathu
podhal’ later on became “Setthu Podhal”.
Hence Sathu is Jeeva Sakthi Vayu that is our Jeevan which is in settled
–in-state called “Shivam” and “Brahmam”. The one who has dissolved and become
such Brahmam is Sadhguru.