November 19, 2021

வாசியோகம் (பகுதி-8) அத்தியாயம் -4

 

Sidha Vedam Vasi yogam part - 8

ஜீவ சக்தியாகிய வாயுதான் ஈஸ்வரன். எப்படி? - ஈஸ் ூ வரன் - பரண சிரே~;டன் - காப்பாற்றும் செயலை செய்வதற்கு உரிமை உடையவன் - ஏன் மாப்பிள்ளை பார்த்தல் வரன் பார்த்தல் என்கிறோம்? ஏன் கணவனே கண்கண்ட தெய்வம் என்கிறோம்? நம்மை காப்பாற்றுவது வாயு அப்படியானால் ஜீவ சக்தியாகிய வாயுதான் ஈஸ்வரன்.

படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலை செய்யும் ஈஸ்வரனும்  ஜீவசக்தியாகிய வாயுவும் ஒன்றே! சிரு~;டி, ஸ்திதி, சம்ஹாரம் மூன்றிற்கும் காரணம் வாயுவாகிய ஈஸ்வரனே! உருவமில்லாத வாயுதான் உருவமுள்ள உடல்  அவதரிக்க காரணமாகிறது. சிரு~;டிக்கு காரணம் வாயுவே! புணர்ச்சி இன்றி சந்தானம் ;இல்லை. வாயு ;இல்லா உடலாகிய பிணம் புணர்ச்சி செய்யுமா? சிரு~;டிக்கு புணர்ச்சி தேவை. புணர்ச்சிக்கு வாயு உள்ள உடல் தேவை. ஆக சிரு~;டிக்கு காரணம் வாயுவே! 

உடம்பில் இருக்கும் நாடிகள் 3 கோடியே 50 இலட்சம். அதில் 72000 மிக முக்கியமானவை – இவை காற்று சஞ்சரிப்பதற்கு பொருத்தமான நாடிகள். - இந்த 72000-ல் 1702 மட்டுமே ஸ்தூல நாடிகள் மற்றவை சூட்சம நாடிகள் - இந்த 1702-ல் தச நாடி என்று சொல்லப்படுகிற 10 நாடிகளே மிக முக்கியமானவை. அவற்றிலும் மிக முக்கியமானவை இடகலை, பிங்கலை மற்றும் சுழிமுனை. அதாவது வாத பித்த கபநாடி. அதிலும் முக்கியமானது சுழிமுனை நாடி. சுழிமுனை என்பது புருவமத்தி. மூலாதாரத்தில் தொடங்கி சுழிமுனையில் வந்து அனைத்து நாடிகளும் சங்கமிக்கும். அந்த நாடிகளில் முக்கியமானது சுழிமுனை நாடி.

உடலின் அனைத்து நாடிகளும் ஒன்று சேரும் இடம், சுக்கிலம் உற்பத்தியாகும் இடம்,  புருவமத்தி. உடலில் மேலும் கீழும் கதாகதம் செய்து கொண்டிருக்கும் ஜீவசக்தியாகிய வாயு ஸ்த்ரீ வடிவம். புருவ மத்தியில் இருக்கும் ஜீவசக்தியாகிய வாயு புரு~ வடிவம். புணர்ச்சியின் போது இவை இரண்டும் புருவமத்தியில் சங்கமித்து சுக்கிலம் கீழ் நோக்கி விரைந்து அதில் வாயு புகுந்து சிரு~;டி உண்டாகிறது. – 

கங்கு மட்டுமே இருப்பது சாதாரண மனிதர்களின் உடல். வாயுவைக் கொண்டு ஊதுதல் என்பதை செய்வதால் அக்னி இருப்பது வாசியோகம் செய்பவரின் உடல். நெருப்பை உருவாக்குதல், காத்தல், அழித்தல் அனைத்தும் வாயுவினால்.

நம் உடலை முதுமை வராமல் அழியாமல் பாதுகாக்க வேண்டுமென்றால் உண்மையில் உடல் எதுவென்று தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய சரீரம் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பது உண்மையில் உங்கள் உடல் இல்லை. உள்ளிருக்கும் காற்றுதான் சரீரம். எப்பொழுது இந்த உடலை சரீரமென்றும் பிணமென்றும் அழைக்கிறோம். ஜீவசக்தியாகிய வாயு, அது இருந்தால் சரீரம் என்றும், இல்லையானால் பிணம் என்றும் அழைக்கிறோம். சரீரம் என்ற வார்த்தை உடலை குறிக்கிறதா? அல்லது உடலில் இருக்கும் வாயுவை குறிக்கிறதா? எது இருந்தால் இந்த உடலை சரீரம் என்று அழைக்கிறோமோ அதுவே சரீரம். வாயுவே சரீரம். காற்றே சரீரம். காற்று இல்லாவிட்டால் உடல் அழிந்து போகின்றது  என்று நினைக்கிறோம். ஆனால் காற்றுதான் உடல் என்பதை நாம் உணர்வதில்லை. னுநயன டிழனல ளை றசழபெ – டிழனல ளை ழெ அழசந”ளை வாந சiபாவ நஒpசநளளழைn. பல்ப் என்று எதை சொல்லுவோம் கரளந போனதையா? அல்லது கரளந போகாத பல்பையா? பேஸ்ட் என்று எதை சொல்லுவோம் காலியான டூத் பேஸட்டையா? அல்லது பசை நிரம்பி உள்ளதையா? புத்தகம் என்று சொல்லுவது அட்டையையா? உள்ளே இருக்கும் வெற்று பேப்பரையா? அல்லது அந்த பேப்பரில் பிரிண்ட் ஆகிஇருக்கும் அர்த்தமுள்ள வார்த்தைகளையா? வாழைப்பழம் என்று சொல்லுவது உள்ளிருக்கும் கனியையா? அல்லது அதன் தோலையா? உள்ளிருக்கும் கனி தீர்ந்து விட்டால் இல்லாவிட்டால் அதற்கு பெயர் தோல். உள்ளிருக்கும் கனியாகிய ஜீவ சக்தியாகிய வாயு இருந்தால் சரீரம் என்றும் அது இல்லாவிட்டால் அதற்கு பிணம் என்று பெயர். அப்படியானால் உள்ளிருக்கும் வாயுதான் சரீரம்.

நாம் காணவும், கேட்கவும், உண்ணவும், எண்ணவும் நடமாடவும் உதவுவது சரீரம். உள்ளே ஜீவசக்தியாகிய வாயு இல்லாவிட்டால் இவைகளை செய்ய முடியுமா? பிணத்தால் இவைகளை செய்ய முடியுமா? அந்த பிணத்திற்கு இவையெல்லாம் முடியாது. அப்படியானால்  சரீரம் என்பது எது? இந்த உடலா? அல்லது உள்ளிருக்கும் ஜீவசக்தியாகிய வாயுவா?

சரீரம் என்ற வார்த்தைக்கு திராவகமாதல் என்று பெயர். அதாவது நீருற்று போல ஊறி ஓடிக் கொண்டிருப்பது. சிறிது சிறிதாக  அழிந்து கொண்டிருப்பது. ஒரு சமயத்தில் முற்றிலும் வற்றி இல்லாமல் போவது. நம் உடலில் சிறிது சிறிதாக நசிந்து போய் அழிவது எது இந்த பருஉடலா? அல்லது வாயு உடலா? வாயு உடல் அதுவே சரீரம். உண்மையில் நசிந்து போகின்றது என்று நாம் நினைக்கின்ற இந்த பருஉடல் நசிவதில்லை. வைரம் பதித்த மரத்துண்டு மண்ணில் புதைத்தால் என்ன ஆகும். மரத்துண்டு கரையானுக்கு புழு பூச்சிகளுக்கு இரையாகி வைரம் மிஞ்சும். அந்த வைரம் தான் நமது எலும்புகள் மண்டையோடு, மரத்துண்டுதான் தோலும் சதையும்- பலநாள் கழித்து தோண்டி பார்த்தாலும் மண்டையோடு எலும்புகள் நசிவதில்லை. மேலும் இறந்து போன மம்மி மியுசியத்தில் இருக்கும் பதப்படுத்தப்படும் உடல், இறந்து போன மீன்களின் பதப்படுத்தப்பட்ட உடல் என்றும் நசிந்து போவதில்லை. உண்மையில் நசிந்து போவது உடலில் இருக்கும் ஜீவசக்தியாகிய வாயுதான். காற்றுதான். அது உடலில் நீருற்று போல ஊறி தொடர்ந்து வெளியே வியாபித்து மனமாக மாறி பஞ்சேந்திரியங்கள் வழியாக வெளியே சென்று நசிந்து நசிந்து ஒருகட்டத்தில் அந்த நீரூற்று எப்படி வற்றி இல்லாமல் போகிறதோ அதேபோல் இல்லாமல் போகிறது. அப்படி நசிந்து இல்லாமல் போவது வாயுதான். அதுவே சரீரம்.

எரியும் வாயு அக்னி சொருபம். சப்த சொரூபம். விளக்கு எரிகிறது என்று கூறுகிறோம். உண்மையில் எரிவது விளக்கா? அதிலிருக்கும் எண்ணையா? திரியா? இது எதுவுமில்லை. காற்றுதான் எரிகிறது. நெருப்பு உண்மையில் எதற்குள் இருக்கிறது? விளக்கிலா? திரியிலா? எண்ணெயிலா? தீக்குச்சியிலா? அல்லது உரச உதவும் தீப்பெட்டியிலா? இவை எதிலும் இல்லை. காற்றில். காற்றின்றி விளக்கு எரிவதில்லை. காற்று அதிகமாக இருந்தாலும் விளக்கு எரிவதில்லை. ஒரு விளக்கை பொருத்தி காற்று போகமுடியாத கண்ணாடி பெட்டிக்குள் வைத்து விடுங்கள். அந்த விளக்கு, அந்த பெட்டிக்குள் இருக்கும் காற்று தீர்ந்து எரிந்து போகும் வரைதான் எரியும். பெட்டிக்குள் காற்று தீர்ந்த உடன் விளக்கும் அணைந்துவிடும். எரிவது விளக்கா? காற்றா? காற்றுதான். இந்த உடலும் அப்படி ஒரு விளக்குதான். உள்ளே காற்று தீர்ந்துபோகும்போது எரிவதற்கு ஒன்றும் இன்றி பிணம் என்று ஆகிறது. முதுமை அடைவது அழிந்து போவது இந்த உடல்தான் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் தீர்ந்து போவது அழிந்து போவது உள்ளிருக்கும் காற்றுதான். இதேபோல்தான் விறகுதான் எரிகிறது என்று நினைக்கிறோம். உண்மையில் எரிவது விறகா? காற்றா? காற்று இல்லாவிட்டால் அங்கே ஏதாகிலும் எரிய முடியுமா? எரிவது காற்றுதான்.  எரியும் வாயு அக்னி சொருபம். 

அக்னி சொரூபமும் வாயுதான். சப்த சொரூபமும் வாயுதான். வாயு  இல்லாவிட்டால் சப்தம் உண்டாக முடியுமா? ஜீவசக்தியாகிய வாயுதான் சப்தமாக நசிந்து செலவாகின்றது. வாயு இல்லையெனில் சப்தமில்லை. சப்தமில்லை எனில் மொழி இல்லை. ஆகவே மொழியும் ஜீவசக்தியாகிய வாயுதான். கத்தாதே கத்தாதே என்று ஏன் கூறுகிறார்கள்? அங்கே செலவாவது ஜீவசக்தியாகிய வாயுதான். அது மரணத்திற்கு ஒப்பாகும். எனவேதான் கத்தாதே கத்தாதே என்கிறார்கள். மலையாளத்தில் காளுக என்றால் அழுதல் என்று பொருள். அங்கேயும் இதுதான் நடக்கிறது. ஆக காற்று சப்த சொரூபம்.

ஓம்சாந்தி! சாந்தி! சாந்தி!

For Audio / Video:




No comments:

Post a Comment

Your comments are most welcome.