August 08, 2021

2. சத்குரு என்பவர் யார்? (Who is Sadhguru?)


 

ஐந்தாவது வேதமாக கருதப்படும் சித்த வேதம் நூல் “சத்குருவே” என்ற வார்த்தையுடன் தொடங்குகிறது. சத்குரு என்ற வார்த்தை தன்னை உணர்ந்த ஞான ஆசிரியரை குறிக்கும். கபீர்தாஸ் தன்னுடைய பாடலில் சத்ய புருசன் என்று அழைக்கப்படும் கடவுளை உணர்ந்தவரே சத்குரு என்று குறிப்பிடுகின்றார். அரூபமான கடவுள் தன்னை உணர்ந்த நிலையில் இருக்கும் ரூப வடிவமே சத்குரு. சத்தியம் சத் என்றால் உண்மை, கடவுள் என்று பொருள்படும். அப்படி பார்த்தால் உண்மையின் வடிவாய் இருப்பவரே சத்குரு. இதற்கு இன்னொரு பொருளும் கொள்ளலாம். சித்த வேதத்தில் சத்து போதல் என்றால் நம்முள் இருக்கும் ஜீவசக்தியாகிய வாயு அதோகதியாய் வெளியே செலவாகி செலவாகி முழுவதும் நசிந்து போதல், இறந்து போதல் என்றும் அதையே மக்கள் செத்துப் போதல் என்று காலப்போக்கில் கூறும் வழக்கம் வந்ததாக குறிப்பிடப்படுகிறது. சத்து என்பது ஜீவசக்தியாகிய வாயு. அதுவே நமது ஜீவன். அது தன்னில் லயமாகிய நிலையே சிவம். பிரம்மம். இவ்வாறு லயமாகி தானாகி தன்மயமாகி பிரம்ம நிலை அடைந்த ஞானியரே சத்குரு என அழைக்கத் தகுந்தவர்கள்.

Who is Sadhguru?

Siddha Vedam also known as Fifth Vedam begins with the word “Sadhguru!” (or Satguru).  The term -Sadhguru refers to an enlightened master who can guide a disciple to attain enlightenment. Kabir Das says in one of his songs: One who has realized God the Sadh Purush is Sadhguru. Sathiyam or sat stands for Truth. Hence Sadhguru is an embodiment of Truth. It is said in Siddha Vedam that we exhaust jeeva sakthi vayu in our day to day life continuously and the result is death which was initially known as ‘sathu podhal’ later on became  “Setthu Podhal”. Hence Sathu is Jeeva Sakthi Vayu that is our Jeevan which is in settled –in-state called “Shivam” and “Brahmam”. The one who has dissolved and become such Brahmam is Sadhguru.



No comments:

Post a Comment

Your comments are most welcome.