May 26, 2021

 


Youtube Video: வாசி யோகம் தமிழில் பகுதி - 7 Vasi Yogam in Tamil (Part 7)


https://youtu.be/DRA0OJyCB-A


வாசியோகம் (பகுதி – 7) அத்தியாயம் -3 எது பாவம் ? எது புண்ணியம்?

சிவ நிலையே, நம்முள் இருக்கும் ஈஸ்வர சக்தி வெளியே வியாபிக்காத நிலையே, அழியாத நிலையே புண்ணியம். அவ்வாறு இருப்பவரே ஈஸ்வரனுக்கு நிகரான ராஜா. தான்வெளியே வியாபித்து அழியும் நிலை பாவம்.

புண்ணியம் (சுகிர்தம்): யாகம், Nஉறாமம், பூசை, அன்னதானம், கோதானம், 

பாவம் : கெட்ட செயல், உயிர்களை துன்புறுத்துதல், தானம் தர்மம் செய்யாதிருத்தல், இவை போன்றவை. (வேதாத்திரி,- பொய், களவு, மது அருந்துதல், விபச்சாரம், சூதாட்டம்(பஞ்சமா பாவங்கள்) –பைபிள் 10 கட்டளைகள் - பாவம் செய்யாதே. பாவத்தின் சம்பளம் மரணம். The wages of sin is death - The Bible

மூன்று கர்மாக்கள்: சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம், ஆகாமிய கர்மம் மூன்றும் மனமாக ஈஸ்வரசக்தி எனப்படும் ஜீவசக்தி வெளியே வியாபிப்பதால் மட்டுமே உண்டாக முடியும்.

புண்ணியத்தால் உயர்வான மனித பிறப்பும், பாவத்தால் தாழ்வான மற்ற ஜீவிகளாய் பிறக்கிறோம் என்பது தவறு. புண்ணியம் செய்து மனித பிறப்பை பெற்ற நாம் ஏன் பாவம் செய்ய வேண்டும்? உலகில் தற்போது பாவம் செய்யாதவறே இல்லை என்று கூறலாம். பாவிகள் எல்லோரும் விலங்குகளாக பறவைகளாக பிறந்தால், மக்கள் தொகை குறைந்து குறைந்து இல்லாமலே போய்விடுமே. அப்படியானால் மக்கள் தொகை குறைகிறதா? அல்லது கூடுகிறதா? விலங்குகள் மனித பிறவியை அடைய என்ன புண்ணியம் செய்யும்? அப்படி விலங்கு பிறப்பை அடைய என்ன பாவம் செய்தன? ஆதாரம் உண்டா? பதில் இல்லை.


முற்பிறவியில் செய்த பாவ புண்ணியத்தை இப்பிறவியிலும், இப்பிறவியில் செய்யும் பாவ புண்ணியத்தை அடுத்த பிறவியிலும் அனுபவிப்போம் என்பது உண்மைதானா? முற்பிறவியில் புண்ணியம் செய்தவர்கள் இந்த பிறவியில் இராஜாவாக, தனவான்களாக, பிராமணர்களாக மற்றும் முற்பிறவியில்பாவம் செய்தவர்கள் இப்பிறவியில் பிச்சைக்காரனாக, வறுமையில் வாடுபவனாக, தீராத நோயளிகளாக பிறந்து தனது  பாவ புண்ணியத்தை அனுபவித்தே ஆகவேண்டும் என்பதும் உண்மைதானா? இராஜாவாக, தனவான்களாக, பிராமணர்களாக பிறந்தவர்கள் அந்த பிறவி முழுவதும் அதே நிலையில் இருக்கிறார்களா, அவர்களுக்கு துன்பமோ, நோயோ வந்து க~;டபட்டதில்லையா? அவர்களது நோய்க்கு முற்பிறவியில் செய்த பாவம் தான் காரணம் என்றால் அவர்கள் இராஜாவாக தனவான்களாக (முற்றிலும் பாவம் இல்லாதவர்கள்தான் இந்த உயர்ந்த பிறப்பை அடைய முடியும் - இராஜாக்கள் புண்ணியோத்கிரு~;ட சரீரி - ஈஸ்வராம்சமாகும் இராஜா - இராஜா பிரதியக்Ñ தேவதா – கண் கண்ட தெய்வம்) – அதனால் தான் கோ என்ற சொல் இறைவனையும் குறிக்கும் இராஜாவையும் குறிக்கும் - சிரசில் ஈஸ்வரனோடு லயமாகி நிற்கும் பாவமற்ற சண்டாளனும் இராஜாவே! – 


பாவம் புண்ணியங்கள் மனதிலிருந்தே,  உள்ளிருக்கும் ஈஸ்வர சக்தியாகிய ஜீவ சக்தி வெளியே மனமாக வியாபிக்கும்போதுதான் உண்டாகின்றன. மனமாக வெளியே வியாபிக்கவில்லையென்றால் அங்கே பாவங்கள் செய்ய இடமில்லை. முற்றிலும் பாவமற்ற நிலையே உயர்ந்த புண்ணியமட்டுமே உள்ள நிலை. அதுவே சிவம் சிவமாக சிவனேயென்று இருக்கும் நிலை. அந்த உள்ளடங்கிய ஈஸ்வரனோடு சிரசில் லயமாகிய அந்த நிலையே புண்ணியம். அதுவன்றி வெளியே சக்தியாக மனமாக சென்றால் செலவழிந்த்தால் பாவம்செய்தல் நிலை. ஈஸ்வர சைதன்யம் நசிந்து போகின்ற நிலையே, இல்லாத நிலையே பாவம் - 


புண்ணியம் ஒடுங்கி சந்திர மண்டலத்தில் பனிக்கு சமமாக சென்று பதிகிறது என்று சொல்லக் காரணம் என்ன?  சந்திரன் என்பது இங்கே மனம் -புண்ணியவானை தனவான் என்றும் புரு~hர்த்தம் மிக்கவன் என்றும் கூறக் காரணம் என்ன? - புரு~hர்த்தம் - புரத்தில் சுழிமுனையில் இருக்கும் அர்த்தம் தனம் என்று பொருள் - அனுலோமம் என்றால் ஐPவ சக்தியை வெளியே விடுதல் என்றும் பிரதிலோமம் என்றால் உள்ளே இழுத்தல் என்றும் பொருள் - கமிக்க செய்தல் அனுகமிக்க செய்தல் என்றும் கூறுகிறோம் -

அனுபவம், யுக்தி (அனுபவத்தில் அடைந்த திறன், ஒன்றை செய்வதற்கு சிறந்தது என கண்ட முறைகள்), சுருதி (குரு சீடர் வழியில் காலம்காலமாக செவிவழி கேட்டு மனதில் மட்டும் இருத்தி வைத்து தொடர்ந்து வந்த ஞானம் - வேதங்கள் -  இவற்றை அனுசரித்து எது வருகிறதோ அதைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பல்வேறு பிறப்புக்கள் ஜீவன்கள் உண்மையில் இல்லை. உடலில் மட்டுமே வேறுபாடு. ஜீவன் ஒன்றுதான். (ஜெராக்ஸ்) ஒரு ஜீவன் - சக்தியாக வெளியே வியாபித்தபோது,  அதன் பிரதிபிம்பமாக வெளிப்பட்டதே மற்ற ஜீவன்கள். அதுவே நாம் காணும் இந்த உலகம். எனது ஜீவனே மற்ற உடலில் உள்ள ஜீவனும். நானே மற்ற உடலிலும் ஜீவன்களாக இருக்கிறேன். இதுவே ஞான நிலை.

நாம் செத்துப்போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? ஜீவ சக்தி நசிக்காமல் இருக்க வேண்டும். நம்மை சாகாமல் இரட்சிப்பது எது? உள்ளே இருக்கும் ஜீவசக்தியாகிய வாயு – அதுவே ஈஸ்வரன் -  நம்மை இரட்சிப்பவரே ஈஸ்வரன்

No comments:

Post a Comment

Your comments are most welcome.