January 20, 2020

முதல் அறியாமை


தான் பயன்படுத்தும் ஒரு பொருளை தான் என்று எண்ணுவதுதான் முதல் அறியாமை. தான் குடி இருக்கும் ஒரு வீட்டை தான் என்று எண்ணுவது, தான் ஒட்டி செல்லும் ஒரு வாகனத்தை தான் என்று எண்ணுவது,. ஆம் இந்த உடல் நாம் பல வருடம் பயன்படுத்தும் ஒரு யூஸ் அண்ட் த்ரூ பொருள் தான். என்றோ ஒரு நாள் காலி செய்ய வேண்டிய நாம் குடி இருக்கும் வீடு தான் இந்த உடல். தினம் வாட்டர் சர்வீஸ் செய்து பழுது பட்டால் உதிரி பாகங்களை மாற்றி, செல்லும் இடமெல்லாம் ஒட்டி செல்லும் ஒரு இரு சக்கர வாகனமே இந்த உடல். மீண்டும் முதல் வாக்கியத்திற்கு வாருங்கள். தான் பயன்படுத்தும் ஒரு பொருளை தான் என்று எண்ணுவது தான் முதல் அறியாமை.

இது முதல் அறியாமை மட்டுமல்ல. மற்ற எல்லா அறியாமைக்கு‌ம் மூல  விதையும் இதுவே.
 எனக்கு வயதாகிவிட்டது என்று ஏன் சொல்ல வேண்டும்? நான் குடியிருக்கும் வீடு பழையதாகிவிட்டது என்றல்லவா சொல்ல வேண்டும். எனக்கு உடம்பு சரியில்லை என்று ஏன் சொல்ல வேண்டும்? நான் குடியிருக்கும் வீடு ரிப்பேர் ஆகி விட்டது என்றல்லவா சொல்ல வேண்டும்.

கண்ணாடி முன் நின்றால் என்னால் என் வீட்டை தான் பார்க்க முடியும். உள்ளே குடியிருக்கும் என்னை என்னாலும் பார்க்க முடியாது. மற்றவர்களும் பார்க்க முடியாது. பின் ஏன் இந்த அழகிப் போட்டி ஆரவாரம் எல்லாம்?

 எல்லா செல்பியும், எல்லா விண்ணப்பங்களில் நான் ஒட்டும் என் புகை படமும் என் வீட்டின் படங்களே!

குடி இருக்கும் வீட்டிற்கு ஆடை எதற்கு? வீட்டிற்க்கு கம்மல் மாட்டி வளையல் மாட்டி அழகு பார்பெதென்ன கொடுமை? மேக் அப் என்ற பெயரில் தினமும் வீட்டை வெள்ளை அடிக்கும் அவசியம் ஏன்?

 எல்லா அறியாமையும் எங்கே இருந்து வருகிறது? இந்த உடலை நான் என்று எண்ணும் முதல் அறியாமையில் இருந்து..

No comments:

Post a Comment

Your comments are most welcome.