November 13, 2023

வாசியோகத்தில் நெற்றிக்கண் திறத்தல்


 

அன்பே சிவம்! அறிவே சிவம்! அமைதியே சிவம்!

 அன்பர்களே! சித்தர்கள் யார்? என்ற கேள்விக்கு சித்தர்களில் பல யுகங்கள் கல்பங்களை கடந்து வாழ்ந்த, மகா சித்தராகிய காகபுசுண்டர் கூறும் பதில்:

“பூட்டுடைத்துக் கண்டவர்கள் மெத்தவுண்டு

புத்தியுள்ளோ ரவர்களே சித்தர் சித்தர்” (33.1-2)

வாசியோகத்தில் இ⁸ந்த பூட்டு உடைத்தல் நெற்றிக்கண் திறத்தல் என்பது ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. ஏன் இந்தப் பூட்டை உடைக்க வேண்டும்? இந்தப் பூட்டு எங்கே இருக்கிறது? இந்தப் பூட்டை எதை கொண்டு எப்படி உடைத்து திறக்க வேண்டும்? அதற்கான பயிற்சி என்ன? அவைகளைத்தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.

 ஏன் இந்தப் பூட்டை உடைக்க வேண்டும்?

உடம்பிலிருக்கும் வாதம் பித்தம் சிலேத்துமம் மிகைக் குறையே உடலின் நோய்க்கும்> அதன் அழிவு என்று சொல்லக் கூடிய மரணத்திற்கும் காரணமாகிறது.

“வாதபித்த சிலேத்துமத்தைப் போக்குவீரே

போக்குவீ ரென்றுசொல்லிப் போக்கத்ததானே

பொருளதனைச் சொல்லிவைத்தே னிடங்கள் தோறும்”

இந்த காற்று> வெப்பம்> கபம் என்ற மூன்றின் மிகை குறையை போக்கி சமப்படுத்த> உடலை அழியும் நிலையிலிருந்து அழியாத நிலைக்கு மாற்றும் காயசித்தி அடைய பூட்டு உடைத்தல் அவசியமாகிறது. இந்தப் பூட்டை உடைத்தால்தான் நெற்றிவழி மேலேறி உச்சி வாசல் எனப்படும் சிரசின் உச்சியிலுள்ள பத்தாம் வாசலை நாம் திறக்க முடியும் என்பதால் பூட்டு உடைத்தல் என்பது மிகவும் அவசியமாகிறது.

இந்தப் பூட்டு எங்கே இருக்கிறது?

 இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்கிறது. இந்தப் பூட்டைத்தான் அறிவியலார் பிட்யூட்டரி கிலாண்ட் என்கிறார்கள். ஆன்மீகவாதிகள் ஆக்கினா சக்கரம் என்கிறார்கள். புராணங்கள் நெற்றிக்கண்> மூன்றாவது கண் என்று குறிப்பிடுகின்றன. இந்தப்பூட்டின் மிகச்சரியான இருப்பிடம் என்பது அண்ணாக்கிற்கு மேல் இரண்டு விரற்கடை அளவில் இருக்கும் ;இடம். இடது காதின் துவாரத்திலிருந்து வலதுகாதின் துவாரத்திற்கு இடையில் ஒரு நீண்ட கோடு போட்டால் அதன் மையமும் புருவமத்தியில் இருந்து பிடரிகண்ணிற்கு ஒரு கோடு போட்டால் அதன் மையமும் இந்தப் பூட்டு இருக்கும் இடம் தான். சாதாரணமாக நாம் மூச்சை வெளியே விடும் போது பிராணன், சீவ சக்தியாகிய வாயு தொண்டைக்குழியைத்தாண்டி அண்ணாக்கிற்கு நேரே மேல்பாகத்தில் இரு துவாரங்கள் வழியாக சென்று இந்தப்பூட்டில் மோதி திறக்க முடியாமல் நாசித்துவாங்கள் வழியாக வெளியேறுகிறது. நாம் மூச்சை உள்ளே இழுத்தாலும் இந்தப் பூட்டை தொட்டுவிட்டுத்தான் உட்புறமாக திரும்பி நாம் முன் சொன்ன பாதைகளின் வழியே பிராணன் நம் உடலுக்குள் செல்கிறது. இவ்வாறாக உள்ளே செல்லும் மூச்சுக்காற்று முட்டி திரும்பும் இடமும் வெளியே செல்லும் மூச்சுக்காற்று முட்டித்திரும்பும் இடமும் இந்தப் பூட்டு இருக்கும் மிகத்துல்லியமான இடமாகும்.

இந்தப் பூட்டை எப்படித் திறக்க வேண்டும்? அதற்கான பயிற்சி என்ன?

“நாக்குமே லண்ணாக்கு உண்ணாக்குள்ளே

நடுத்தமரைத் தான்திறந்தா லுச்சிவாசல்

மூக்குமேற் தண்டினிலே முனை மூக்குக்குள்

முளைத்தெழுந்த வாசிவரப் பார்த்தபேர்கள்

தாக்குவார் புருவநடு மேலே பார்ப்பார்

தமர்வாச லடைத்திருக்கும் பூட்டுத்தானே.” (32.3-8)

அதாவது நாம் வாயைத்திறந்தால் நமது நாக்கிற்கு மேலாக உட்புறமாக ஒரு சிறு நாக்கு தொங்கிக் கொண்டிருக்கும். அந்த உள் நாக்குக்கு உள்ளே அதாவது உள்நாக்குக்கு நேராக மேல் பாகத்தில் இருக்கும் இரு துவாரங்களை கடந்து சென்றால் இருக்கும் இந்த நடுத்தாமரை பூட்டு திறந்தால்தான் சிரசின் உச்சி வாசல் எனப்படும் பத்தாம் வாசல் திறக்க முடியும் என்று காகப்புசுண்டர் கூறுகின்றார். முடியும் வார்த்தைதயிலிருந்த தொடங்கி இந்தப் பாடலின் வார்த்தைகளை படித்துப்பாருங்கள். மூக்குமேல் தண்டினிலே முனை மூக்குக்கு உட்புறமாக அதாவது புருவமத்திக்கு உட்புறமாக> முளைத்தெழுந்த வாசிவரப் பார்த்தபேர்கள் தாக்குவார்கள்> தாக்குவார்கள் புருவநடு> புருவநடு மேலே பார்ப்பார்> புருவநடு மேலே பார்ப்பார்கள் தமது வாசல் அடைத்திருக்கும் பூட்டுதானே. அண்ணாக்கிற்கு மேலே உட்சுவாசம் ஏற்பட்டு குண்டலினி சக்தி எழும்ப பார்த்த பேர்கள் சிவனாக இருந்து சீவனாக விரிந்த தமது வாசல் அடைத்திருக்கும் பூட்டினை பார்ப்பார்கள்.

 கதவு திறத்தல் என்றாலே அண்ணாக்குக்கு மேல் கதவு ஒன்று அடைத்து பூட்டு போடப்பட்டுள்ளது அதை திறக்க வேண்டும் என்று பொருள் ஆகிறது.

அந்தக் கதவு எப்போது அடைக்கப்பட்டது. தாயின் கருப்பையில் இருந்தபோது அது திறந்துதான் இருந்தது. வெளியே வந்து உலகவாழ்வில் பிராணன் ஈடுபட்டு வெளியே சென்று வீணாக வீணாக சிறிது சிறிதாக பயன்படுத்தாத அந்தக் கதவு அடைத்துப்போனது.

அந்த பூட்டைத் திறக்க வேண்டியது யார்? இடகலை பிங்கலை ஓடாது சுசும்னா நாடியில் ஒடும் பிராணனனும், வெளியே ஆசைகளாக காமத்தீயாக விரியாது உள்ளடங்கி இருக்கும் மனதும்> முளைத்து எழுந்து ஆதாரமையங்களை கடந்து புருவமத்தி சேரும் குண்டலினி சக்தியும் ஒன்றுசேர்ந்துதான் அந்தக் கதவை திறக்க வேண்டும். தொண்டைக்குழியிலிருந்து உறிஞ்சி மூச்சை இழுத்து ஊதுதல் முறையில் அந்தக் கதவை தட்டி முட்டி திறக்க வேண்டும். அதற்கு அகங்காரமாக உள்ள நான் மனதில் அடங்க வேண்டும். மனமாக உள்ள வாயுவாகிய நான் பின் ஜீவனில் அடங்க வேண்டும். ஜீவனாக உள்ள நான் சிவத்தில் அடங்க வேண்டும். சிவன் - ஜீவன் - மனம் - அகங்காரம் (நான்) (சித்தவேதம். அத்.22)

எண்சாண் உடம்பில் சிரசே சேj;திரம்> ஆலயம். அதற்குள் நுழைந்து சிவத்தை தரிசிப்பதற்கு ஒன்பது வாசல்கள் என்பதை குறிப்பாக உணர்த்தவே கோயிலில் ஒன்பது வாசல்களை வைத்தார்கள் சிவனை சென்றடைய: கோயிலின் வெளிப்புறத்தில் இருக்கும் நான்கு வாசல்கள் கடந்து உள்ளே நாலம்பலத்திற்கு செல்லுதல் என்றால் என்ன? காதுகள் இரண்டும்> கண்கள் இரண்டும் கோயிலின் வெளிப்புற வாசல்கள். பிராணன் மனமாக அறிவாக கண்கள் வழியே காதுகள் வழியே வெளியே செல்லாமல் உள்புறமாக செல்லும் போது முதலில் இந்த நான்கு வாசல்களை கடக்கிறது. தியானத்தில் கண்களை மூடி இருக்கும் போது காதுகள் வெளிப்புற சத்தங்களை கேட்காத போது அல்லது சத்தம் இல்லாத அமைதியான இடத்தில் தியானம் செய்யும் போது இது சாத்தியமாகிறது. அடுத்து நமஸ்கார மண்டபத்திற்குள் செல்ல இருக்கும் மூன்று வாசல்களை எப்போது கடக்கிறோம்? வெளியே பேச்சு கத்துதல் என்று சப்தமாக விரியாமல் தியானத்தில் வாயை மூடி இருக்கும்போது பிராணன் உட்புறமாக திரும்பும்போது நமஸ்கார மண்டபத்திற்குள் செல்வதற்காக உள்ள மூன்று வாசல்களில் ஒன்றாகிய இந்த வாய் என்ற வாசலை கடக்கிறோம். மூக்கின் வழியாக உள்ளும் வெளியும் செல்லும் சுவாசம் உட்சுவாசமாக மாறும்போது நமஸ்கார மண்டபத்திற்குள் செல்ல உள்ள நாசித்துவாரங்கள் என்ற மற்ற இரண்டு வாசல்களை கடக்கிறோம். இப்படித்தான் நாம் வாசியோகம் செய்யும் போது இந்த மூன்று வாசல்களை நாம் கடக்கிறோம். சிரசு என்னும் கோயிலில் உள்ள நமஸ்கார மண்டபத்திற்குள் நுழைகிறோம். நமஸ்கார மண்டபத்திலிருந்து மூலஸ்தானத்திற்கு சென்று இறைவனை தொடுவது தரிசிப்பது எப்போது நடக்கிறது? நடைமுறையில் வெளிஉலகில் பூசை செய்யும் ஐயருக்கு மட்டுமே இது சாத்தியமாகிறது. பக்தர்கள் இந்த இருவாசல்கள் வழியாக செல்ல அனுமதி மறுக்கப்படுகிறார்கள். ஆனால் வாசியோகத்தில் நமது சுவாசம் அண்ணாக்கிற்;கு மேலே இருக்கின்ற இருதுவாரங்கள் வழியாக சென்று அங்கு பூட்டி இருக்கும் பூட்டைஉடைத்து பின் நெற்றி வழியாக உச்சிவாசலை அடைந்து அதையும் முட்டி திறந்து சீவன் உள்ளிருக்கும் சிவனை தரிசிப்பது சாத்தியமாகிறது. அண்ணாக்கிற்கு மேலே இருக்கின்ற சிவலிங்கத்தை தரிசிப்பது பிராணன் உள் சுவாசத்தில் உயர்நிலையாக தன்னில் மேலும் அடங்கும்போது ஒரு புள்ளியாக புருவமையத்தில் ஒடுங்கும் போது நடக்கிறது. வெளியில் இருக்கும் கோயிலுக்கு சென்று சிவனை தரிசிப்பது என்பது நமது சிரசாய் இருக்கும் கோயிலுக்குள் சென்று வாசியோகத்தில் சிவனை தரிசிப்பதற்கு ஒரு வழிகாட்டுதலாக அடையாளம் காட்டுவதாக சொல்லப்பட்டது. ஆகவே வாசியோகம் செய்தலே உண்மையான சிவவழிபாடு.

இந்தப் பூட்டு எப்போது திறக்கும் என்பதையும் பின்வருமாறு காகபுசுண்டர் கூறுகிறார்:

“காட்டம் விறகெய்தாமற் தீயிடாமல்

கதிர்மதிக்கு மத்தியது புருவமத்தி

நாட்டமிடக் கோபுரத்தின் வாசற்பூட்டு

நாசிமுனை புருவமத்தி திறந்து கொள்ளே.”( 33.5-8)

ஆசைத்தீ> கோபத்தீ> காமத்தீ என்று சீவசக்தியாகிய வாயுவை வெளியே மனமாக ஓடவிடாமல்> சூரிய கலைக்கும் சந்திரக்கலைக்கும் மத்தியது புருவமத்தி எனப்படும் சுழுமுனை அதை நாட்டமிட தொடர்ந்து கவனிக்க வாசல் பூட்டு நாசிமுனை புருவமத்தி திறந்து கொள்ளும் என்பது காகபுசுண்டர் வாக்கு.

இதற்கான பயிற்சி:

தொண்டைக்குழியில் இருந்து மூச்சை உட்புறமாக உறிஞ்சி இழுத்து புருவமத்தியில் ஐந்து முறையும் பின் அண்ணாக்கிற்கு மேல் இரண்டு விரற்கடை உயரத்தில் உட்புறமாக ஆழமாக சென்று ஐந்து முறையும் ஊதுதல் வேண்டும். அவ்வாறு ஊதிய பின் புருவமத்தியை பத்து மூச்சுகால அளவு கவனித்துவிட்டு அசையாது சித்திரம் போல அமர்ந்து மூச்சின் ஓட்டத்தை சில நிமிடங்கள் கவனிக்க அது மெதுவாக ஓட்ட வேகம் குறைந்து அண்ணாக்கிற்கு மேல் மையத்தில் அமைதி கொள்ளும். அங்கு வாசியின் ஓட்டத்தை இதமான பூ போன்ற அசைவை தொடர்ந்து கவனிக்க கவனிக்க> அப்போது ஏற்படும் மனமற்ற மூச்சற்ற நிலையிலேயே லயிக்க லயிக்க குண்டலினி சக்தி மேலெழும்பி ஒவ்வொரு ஆதார மையங்களாக கடந்து புருவமத்தி வந்துசேரும். ஒவ்வொரு ஆதார மையத்தையும் கடக்கும்போது ஏற்படும் துன்பங்களை ஆன்ம தூய்மை> உடல் தூய்மை> வினைத்தூய்மையாக பொறுத்துக் கொண்டு அதையும் கடந்து செல்ல வேண்டும். புருவமத்தியில் குண்டலினி அடைந்தஉடன் பூட்டுதானாய் திறக்கும். இதற்கு “ராக்காலம் கதவடைத்து கண்மணியே பார்ப்பவர்கள் தேறுவார்கள்” என்று காகபுசுண்டர் கூறுகிறார்.

இதை அனைவரும் சித்தர்வழி செய்து பயன்பெறுவோம்.

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!


No comments:

Post a Comment

Your comments are most welcome.