May 21, 2021

Vasi Yogam in Tamil (Part 5) வாசி யோகம் பகுதி - 5




 குருவே துணை.

வாசியோகத்தால் காயசித்தி அடைய வேண்டுமானால், அதற்கு

நம் உடம்பில் போதுமான அக்கினி உண்டாயிருக்கவில்லை.

நெருப்பின் குணம்:

நெருப்பின் குணம் தன்னில் போடப்படும் பொருளை எரித்துச் சாம்பலாக்குவது. மணமுள்ள பொருள் என்றால் எரித்து அந்த இடத்தையே நறுமணமுள்ளதாக மாற்றுவது. (சாம்பிராணி, பத்தி) மாசு உள்ள பொருளைக் கூட எரித்துத் தூய்மைப்படுத்துவது. பிரகாசமற்ற ஒன்றையும் பிரகாசிக்க செய்வது. (தங்கம்). வெப்பத்தினால்  பொருள்கள் விரிவடையும். கடினமான பொருளையும் உருமாற்றலாம். (இரும்பு, தங்கம், வெள்ளி, பிளாஸ்டிக்). நெருப்பிற்கு நிலையான உருவம் கிடையாது. உரு மாறிக் கொண்டே இருக்கும். நெருப்பு காற்றைக் குடித்தே உயிர் வாழ்கிறது. எங்கே போதுமான அளவு காற்று இல்லையோ அங்கே நெருப்பும் உயிர்வாழ இயலாது. எங்கே இரை இல்லையோ அங்கே நெருப்பு உயிர்வாழ இயலாது. நீரும் காற்றும் அப்படி இல்லை. நெருப்பு உருவாகும் இடம் அழுத்தம் ஏற்படும் இடம்.

நம் உடம்பில் நெருப்பு போதுமான அளவு இல்லை – ஆதாரம்

 1. நெருப்பின் குணம் தன்னில் போடப்படும் பொருளை எரித்துச் சாம்பலாக்குவது. நாம் உண்ணும் உணவு அக்கினியில் பட்டு எரிக்கப்படுகிறது என்றால் ஏன் மலத்தில் சாம்பல் இல்லை? உணவை எரிக்க அங்கே போதுமான அக்னி இல்லையென்றே பொருள். பிறந்த குழந்தை ஞானியர் மலம் எப்படி இருக்கும்? அப்ப அவர்கள் இருவர் உடலில் மட்டும்தான் நெருப்பு உள்ளதா? மற்றவர்  உடம்பில் போதுமான அக்கினி உண்டாகவில்லை.

2. மணமுள்ள பொருள் என்றால் எரித்து அந்த இடத்தையே நறுமணமுள்ளதாக மாற்றுவது நெருப்பின் குணம். அப்படியானால் வாசனையுள்ள பொருளை உண்கிறோம். வயிற்றில் உள்ள நெருப்பு அதை எரித்து சீரணித்தால் ஏன் மலம் நாற்றம் அடிக்கிறது? மலம் வாசனையாக அல்லவா இருக்க வேண்டும். ஏன் நாற்றம் அடிக்க வேண்டும்? உடம்பில் போதுமான அக்கினி இல்லையென்றே பொருள். 

3. நெருப்பில் உயிர்கள் உயிர்வாழ முடியாது. அக்கினியில் எரிக்கப்பட்டு வரும் சீரணிக்கப்பட்டு வரும் மலத்தில் எப்படி புழு பூச்சிகள் காணப்படுகின்றன? சாமான்ய மனிதர்கள் உடம்பில் போதுமான அக்கினி இல்லையென்றே பொருள். 

4. மாசு உள்ள பொருளைக் கூட எரித்துத் தூய்மைப்படுத்துவது நெருப்பு. பிரகாசமற்ற ஒன்றையும் பிரகாசிக்க செய்வது நெருப்பு. பின் ஏன் உடம்பில் உள்ள அக்கினியினால் அந்த உடல் தூய்மையடைவதில்லை. பிரகாசிக்கவில்லை. மாறாக நோய்வாய்படுகிறது. முதுமையடைகிறது. நெருப்பினால் ஒரு பொருள் விரிவடையும். உடம்பில் நெருப்பு இருந்தால் ஏன் உடல் முதுமையடைந்து சுருங்கிப்போகிறது. பிரகாசமற்ற ஒன்றையும் பிரகாசிக்க செய்வது நெருப்பு. உடல் ஏன் முதுமையடைந்து பொலிவிழந்து போகிறது.  விருத்தரும் பாலராவார் மேனியும் சிவந்திடும் அப்படின்னு சித்தர்கள் சொன்னது என்னாச்சு? இங்கே பாலரும் விருத்தரானதுதான் மிச்சம். சாமான்ய மனிதர்கள் உடம்பில் போதுமான அக்கினி இல்லையென்றே பொருள். 

எருக்குழியில் கொட்டப்படும் பொருள்கள் கெட்டுப்போவதுதான் எரு. தாவரத்திற்கு உணவு. வயிறுதான் எருக்குழி.  வயிற்றுக்குள் போடப்படும் உணவு கெட்டுப்போனால்தான் சீரணம் நன்றாக நடந்திருக்கிறது என பொருள். கெட்டுப்போகாமல் உடலுக்கு தேவையான உரமாக மாறாமால் வெளியே அப்படியே வந்தால் அதுவே அசீரணம். சாப்பிடும் உணவு கெட்டுப் போவதற்கே. கெட்டுப்போனால்தான் அது உணவாக எருவாக மாறும். உயிர் வாழத் தேவைப்படும் உணவாக மாறும். உண்ணும் உணவு எருவாக மாறி மீண்டும் உடலுக்கு சத்துள்ள உணவாக மாறுகிறது.

தேவையற்ற காய்கறி கழிவு, தூக்கியெறியப்படும் பழத்தோல், அரிசி களைந்த தண்ணீர் இப்படி உருவாகும் களனித்தண்ணீரை குடித்துவிட்டு மாடு கொழு கொழு என இருக்க காரணம் என்ன? மாட்டின் வயிற்றுக்குள்தான் மிகப்பெரிய எருக்குழி இருக்கிறது. ஜல்லிக்கட்டு என்று சொல்லி அடக்க முடியாத அளவுக்கு மாடு ஏன் சக்திவாய்ந்ததாக மாறுகிறது? 

சுக்கிலமே பிரம்மம். அது எப்படி உருவாகிறது?

வயிறு என்னும் எருக்குழியில் போடப்படும் உணவு நெருக்கத்தினால் அழுத்தமும், அழுத்தத்தினால் சூடும், சூட்டினால் புழுக்கமும், பழுக்கத்தினால் வியர்வையும் உண்டாகிறது. சூடு எங்கே இருக்கிறதோ அங்கே ஆவி உண்டாகும். ஆவிதான்; வியர்வையாக மாறும். அந்த வியர்வையே சுக்கிலம். விந்து. ஆக அக்கினியே சுக்கிலத்தின் மூலம். சுக்கிலமே அக்கினி. குண்டலினி. குண்டம் - நெருப்பு , அலி – ஆணும் பெண்ணுமான தன்மையுள்ள – அர்த்தனாரீஸ்வரர். சுக்கிலமே பிரம்மம். ஏன்? சுக்கிலத்தை கொண்டுதான் சிருÑ;டி. எனவேதான் பிரம்மா. பிரம்மாண்ட கடாகம் சுவேதஜோத்பவம் என்பார்கள். சுவேதம் என்றால் சூட்டினால் ஆவியாகி உண்டான வியர்வை என்று அழைக்கப்படும் சுக்கிலம். நாம் காணும் இந்த பிரம்மாண்ட உலகம் வியர்வையிலிருந்து உண்டானது என சொன்னதன் பொருள் இதுதான். பிரம்மாண்ட கடாகம் சுவேதஜோத்பவம்.

வயிறு என்னும் எருக்குழிக்குள்  உணவிலிருந்து உருவான சாறு, அந்தக் கறை, அதுதான் இரத்தம.; சுரோணிதம் எனப்படுகிறது. அது  வியர்வை என்னும் சுக்கிலத்துடன் அங்கே கலந்து அதற்குள் வாயுபுகுந்து ஜீவிக்கத் தொடங்கும்போதுதான் ஜீவன்கள் உருவாகின்றன. உடலுக்கு உள்ளேNயும் வெளியேயும் புழு பூச்சிகள் ஜீவன்கள் உருவாக இதுவே காரணம். சுக்கிலம் மட்டும் அல்லது இரத்தம் மட்டும் அல்லது காற்று மட்டும் தனித்து இருந்தால் அங்கே உயிர் உருவாவதில்லை. இவை ஒன்றாக சேரும் போதுதான் உயிர் உருவாகிறது. பரமாய சக்தியுள் பஞ்சமா பூதங்கள் தரம்மாற தோன்றும் பிறப்பு என ஒளவையார் கூறுகிறார்.

சூரியனிலிருந்து வரும் சக்தி வெப்பம் ஒளி எல்லா தாவரங்களுக்கும் ஒரே அளவில்தான் கொடுக்கப்படுகிறது. ஆனால் சில தாவரங்கள் மட்டும் வாடி கருவி மடிந்து போவதேன்? சில தாவரங்கள் அந்த சக்தியை உறிந்து வளர்ந்து செழிப்பது ஏன்? நம் உடலுக்குள் இருக்கும் சூரியனே பிராணனன். அக்கினி சொருபமான சூரியனுக்கே பிராணன் என்று பெயர். அது இருக்கும் இடமே நெற்றிக்கண். நெருப்புக் கண். புருவமத்தி. வயிறான எருக்குழிக்குள் போடப்படும் உணவின் சக்தியை உறிந்து உடல் செழித்துவளர உதவுவது இந்த பிராணன். சத்தில்லாத உணவை மலமாக வெளியேற்றுகிறது.

சிரசே ஆகாயம். நெற்றிக்கண்ணின் மகிமை. இடங்கலை பிங்கலை சுழிமுனை என சொல்லப்படுவது எது? என்பது குறித்து தொடந்து குரு விளக்குகிறார். அதை அடுத்த வீடியோவில் விளக்கமாக காண்போம்.
இணைந்திருப்போம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
தொடரும்

February 20, 2021

Vasi Yogam in Tamil (Part 4) வாசி யோகம் பகுதி - 4

 

குருவே துணை.
1. பந்தத்திற்கும் மோட்சத்திற்கும் மனமே காரணம்.
பற்றுள்ள நிலையே பந்தம். பற்றற்ற நிலையே மோட்சம். எல்லாம் நானே. இருப்பது நான் ஒருவனே. நானே ஏகனாக, அதாவது ஒருவனாக எங்கும் எல்லாமாக இருக்கிறேன் என்று உணர்கிற போது அங்கே தன்னை தவிர வேறு ஒன்று இல்லை என்று உணர்கிறபோது அங்கே அடைவதற்கு பொருளோ நபரோ இல்லாமல் போகிறது. எதன் மேல் ஆசைப்படுவது? யார் மேல் ஆசைப் படுவது? இருப்பது நான் மட்டுமே. இதுவே மோட்சம். இப்படி இல்லாமல் தன்னை தவிர தன்னை சுற்றிலும் பல மனிதர்களும் பொருள்களும் உள்ளன. அவற்றில் எதிலிருந்து இன்பம் கிடைக்கும் அது மேலும் மேலும் வேண்டும் என்கிறபோது அங்கே அறியாமை உண்டாகிறது. பற்று ஏற்படுகிறது. பந்தம் ஏற்படுகிறது. பந்தம் பற்று இரண்டும் மனதின் இருவேறு நிலைகள்தான். இரண்டுமே மனதில் தோன்றுவதுதான். ஒன்று அறியாமை. மற்றொன்று உண்மையை அறிந்த ஞானம். மோட்சம்.

2. ஜீவன் இருந்தாலும் கூட மனமிருந்தால் மட்டுமே ஒரு உடலால் காணவோ, கேட்கவோ, அறியவோ முடியும். (தூங்கும் குழந்தை)

3. எந்த ஒன்றும் எதிலிருந்து வந்ததோ அந்த இடத்திற்கே, மூலத்திற்கே சென்று அதில் கரைந்து காணமல் போவது இயற்கை நியதி. அது உப்பு தனது மூலமான நீரில் கரைந்து காணாமல் போவது போல. மனம் தனது மூலமான ஜீவனில் கரைந்து காணாமல் போவது போல. (தூக்கத்தின் போது)
சத்தம் எதிலிருந்து உருவாகிறது? எதில் மீண்டும் கலக்கிறது? அமைதியில். தனது மூலத்தில். வெளிச்சம் எதிலிருந்து உருவாகிறது? எதில் மீண்டும் கலக்கிறது? இருளில். தனது மூலத்தில். கடலின் அலைகள் எதிலிருந்து உருவாகின்றன? எதில் மீண்டும் கலந்து காணாமல் போகின்றன? அதே கடலில். தனது மூலத்தில்.  உருவங்கள் எதிலிருந்து உருவாகின்றன? எதில்  மீண்டும் கலக்கின்றன? அரூபத்தில். வெட்ட வெளியில். தனது மூலத்தில்.   இறைவனின் உண்மையான  திருவிளையாடல் எது? இந்த பிரபஞ்சமும், நீங்களும் நானும் தான்.

4. சிந்திக்கும் மனம் இருக்கும் இடம் தலையில். புருவமத்தியில். நெஞ்சுக் குழியில் அல்ல.
சிந்திக்கும் போது கண்களும் கைகளும் எங்கேசெல்கின்றன? மறந்து போனால் எந்த இடத்தை தட்டுகிறோம்? இடுப்பையா? அல்லது நெற்றிப்பொட்டையா? மறந்து போனால் ஆசிரியர் எந்த இடத்தில் குட்டு வைக்கிறார்? மறந்து போனால் நெற்றியை தேய்பதும் தலையைசொரிவதும் ஏன்? தப்பு செய்தால் அதை பின்பு உணரும்போது கூட தலைதலையாக அடித்துக்கொள்வது ஏன்? மனம் இருக்கும் இடம் நெஞ்சுக் குழியில் என்றால் ஏன் சிந்திக்கும் போது எல்லா செயல்களும் மேல் நோக்கி, தலையை நோக்கியே இருக்கின்றன? அதனால்தான் புருவமத்தியில் தீட்சை பெற்றஉடன் உபதேசம் பெற்ற உடன் மனம் 14 அலைச்சுழலுக்கு கீழே வந்து அமைதி அடைகிறது.